Our Feeds


Tuesday, May 19, 2026

Zameera

தேசிய மாவீரர் தினம்: பாராளுமன்ற பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்


 தேசிய மாவீரர் நினைவு தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற விளையாட்டு மைதான பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (19) விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


ஜனாதிபதியின் தலைமையில், தேசிய மாவீரர் நினைவு தின உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (19) பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபிக்கு அருகில் நடைபெறவுள்ளது.



இதன் காரணமாக, இன்று பிற்பகல் 03.30 மணிமுதல் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள் பொல்துவ சந்தியிலும், கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் கியும்ஹேம் சந்தியிலும் கட்டுப்படுத்தப்படவுள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வாகனங்கள் மாற்று வழிகளில் திருப்பி விடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அதன்படி, பாராளுமன்ற வீதி வழியாக கொழும்பிலிருந்து வெளியேற முற்படும் வாகனங்கள், பொல்துவ சந்தியிலிருந்து பத்தரமுல்ல, பாலந்தூன மற்றும் கியும்ஹேம் சந்தி ஊடாக பயணிக்க முடியும்.


கியும்ஹேம் சந்தியிலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள், பாலந்தூன மற்றும் பத்தரமுல்ல ஊடாக பயணிக்க முடியும்.


போதிராஜ மாவத்தை வழியாக வரும் வாகனங்கள், பத்தரமுல்ல வீதியை அடைந்து தமக்குத் தேவையான மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம்.


இந்த நிகழ்வுக்கு வருகை தரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களை  நிறுத்துவதற்காக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


அதன்படி, ஜப்பான் நட்புணர்வு வீதிச் சந்தியிலிருந்து கிம்புலாவல சந்தி வரை, ஜப்பான் நட்புணர்வு வீதி மின்சார சபை நிலையத்திற்கு அருகிலிருந்து பெலவத்த சந்தி வரை.


எனவே, குறிப்பிட்ட காலப்பகுதியில் இப்பாதைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.    

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »