Our Feeds


Monday, May 4, 2026

SHAHNI RAMEES

விஜய்க்கு பிரதமர் மோடியிடம் இருந்து வந்த வாழ்த்து.. தொடர்ந்து சப்போர்ட் கொடுப்போம் என உறுதி!


சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு

பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக முன்னிலை பெற்றுள்ள நிலையில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து உதவும் என்று கூறினார்.


சட்டமன்ற தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- தவெகவின் ஈர்க்கக்கூடிய செயல்திறனுக்கு எனது பாராட்டுகள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து உதவும். தேசிய ஜனநயக கூட்டணிக்கு ஆதரவளித்த வாக்காளர்களுக்கு நன்றி. தமிழக முன்னேற்றம், மக்கள் நலனுக்கு உதவிகளை மத்திய அரசு தொடரும்" என்று பதிவிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »