தேசிய போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு 2026 மே 22 அன்று போயகானையில் உள்ள விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மையத்தை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
57ஆவது காலாட் படைப்பிரிவின் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இம் மருத்துவ மையம் பல் மற்றும் பிற மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதுடன் இது குருநாகல் மாவட்டத்தில் வசிக்கும் சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற இராணுவப் பணியாளர்களுக்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சேவைகளை வழங்குவதற்காக திறக்கப்படவுள்ளது.
