குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (26) முன்னிலையாகியுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்கு அமைவாக, வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.