Our Feeds


Saturday, May 9, 2026

SHAHNI RAMEES

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு… - அட்டமஸ்தானத்தின் தலைமை தேரர் பல்லேகம ஹேமரத்ன தேரர் கைது!

 

அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமை தேரர், 

பல்லேகம ஹேமரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

​அஷ்டமஸ்தானாதிபதி தேரரின் கைது தொடர்பான விடயங்கள் இன்று நீதிமன்றத்தில் அறிக்கைப்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

​பல்லேகம ஹேமரதன தேரர், சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

​தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இந்தச் சம்பவம் தொடர்பான உண்மைகளை நேற்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்ததையடுத்து, சந்தேக நபரான தேரர் மற்றும் சிறுமியின் தாயாரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

​அனுராதபுரம் தலைமை நீதவான் சியபத் சசிது விக்ரமரத்ன, சந்தேக நபரான தேரருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதித்துள்ளார்.

​கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

​தற்போது பல்லேகம ஹேமரதன தேரர் உட்பட மூவர் இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »