Our Feeds


Tuesday, May 26, 2026

Admin

சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் எந்த தடையும் இல்லை - நளிந்த ஜயதிஸ்ஸ!


தேர்தல் முறைமை குறித்த சட்ட ரீதியான சிக்கல்கள் தீர்க்கப்பட்டால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் எவ்வித தடையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வெகு விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் இலக்கு. அதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே நிதி பிரச்சினை இல்லை என்றார்.

அத்துடன், எதிர்க்கட்சியிலிருந்து எவரையும் அரசாங்கத்தில் இணைப்பதற்கு எதிர்பார்க்கவுமில்லை. அதனை நாம் விரும்பவுமில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கட்சி மாறுபவர்களது பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் விரைவில் முன்வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »