Our Feeds


Thursday, May 7, 2026

Zameera

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின் லெபனான் மீது இஸ்ரேல் முதல்முறை தாக்குதல்


 போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதன் பின்னர், முதன்முறையாக இஸ்ரேல் லெபனானின் பெய்ரூட் நகரில் உள்ள ஹிஸ்புல்லாஹ் ஆயுததாரிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், கட்டிடம் ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் ரத்வான் படையணியின் தளபதி ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு தான் தனிப்பட்ட ரீதியில் அனுமதி வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.


ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்கள் கூட்டமொன்றில் இருந்தபோது, அந்நாட்டு நேரப்படி இரவு 8 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், இத்தாக்குதல் குறித்து ஹிஸ்புல்லாஹ் அமைப்பு இதுவரை எந்தப் பதிலையும் வழங்கவில்லை.


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்ததன் பின்னர், பெய்ரூட் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »