Our Feeds


Tuesday, May 19, 2026

Zameera

இந்தியாவின் சீனி ஏற்றுமதி தற்காலிக நிறுத்தம் - மாற்று இறக்குமதிக்கு நடவடிக்கை


 இந்தியா சீனி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ள நிலையில், இலங்கைக்கு மாற்று நாடுகளிலிருந்து சீனி இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரேசில், தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது நாட்டில் போதுமான சீனி கையிருப்பு இருப்பதால் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் குறித்த சங்கம் கூறியுள்ளது.

இதேவேளை, டொலர் மதிப்பு உயர்வால் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு இந்தியாவின் ஏற்றுமதி தடையுடன் தொடர்புடையதல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »