நுவரெலியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று
(23) பிற்பகல் முதல் கடும் மூடுபனி நிலவி வருகிறது.இதனால் எதிரே வரும் வாகனங்கள் கூடத் தெரியாத அளவுக்குப் பார்வைத் திறன் குறைந்துள்ளதால் வீதிகளில் வாகனங்களைச் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழையும், நகர்ப் பகுதியில் மிதமான மழையும் அவ்வப்போது பெய்து வருகிறது.
நுவரெலியா நகருக்குள் நுழையும் பிரதான வீதிகள் அனைத்திலும் கடும் பனிமூட்டம் காணப்படுவதால், வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் நுவரெலியா - கண்டி மற்றும் நுவரெலியா - ஹட்டன் ஆகிய பிரதான வீதிகளே அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
தொடர்ந்து நிலவும் கடும் பனிமூட்டம் மற்றும் குளிரால், உள்ளூர் மக்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
