ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ உள்ளிட்ட குழுவினர், மூன்று நாள் உத்தியோகப்பூர்வப் விஜயமாக மே 3 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தர உள்ளனர்.
இந்தப் பயணத்தின் போது, ரஷ்ய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர், ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுகாதாரத் துறையில் உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸாவுடன் ஒரு சிறப்பு கலந்துரையாடலில் ஈடுபடஉள்ளனர்.
மேலும், வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் இத்தூதுக்குழுவினர் ஒரு சிறப்பு கலந்துரையாட யாடலில் ஈடுபடஉள்ளனர்.
ரஷ்ய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் மே 04 அன்று கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைப் பார்வையிடவுள்ளார்.
