Our Feeds


Saturday, May 30, 2026

Zameera

ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட தான் இன்னும் தயாராக இல்லை


 ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட தான் இன்னும் தயாராக இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 


தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள நீண்ட அறிக்கை ஒன்றில், இது குறித்து "இறுதி முடிவை எடுப்பதற்காக" வெள்ளை மாளிகையில் தான் விசேட கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 


ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது தொடர்பாக தற்காலிக உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். 


எவ்வாறாயினும், இறுதி ஒப்பந்தத்திற்கான மேலதிக நிபந்தனைகளையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 


ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களையோ அல்லது குண்டுகளையோ வைத்திருக்கமாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும் என்பதும், கடல்சார் போக்குவரத்திற்கு எவ்வித வரிகளோ அல்லது கட்டுப்பாடுகளோ இன்றி ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்க வேண்டும் என்பதும் அந்த நிபந்தனைகளில் உள்ளடங்குகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »