Our Feeds


Wednesday, May 6, 2026

Zameera

பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் கைது


கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹீனட்டியன பகுதியில் கெஹெல்பத்தர விசேட அதிரடிப் படை முகாம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் T-56 ரக தோட்டாக்கள் மற்றும் மெகசீனுடன் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கைப்பற்றப்பட்ட 54 தோட்டாக்கள் மற்றும் மெகசீன் ஆகியவை வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒரு குற்றவாளிக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கட்டுநாயக்க பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »