வெசாக் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளமையினால்
ஹஜ் பெருநாள் காலத்தில் உழ்ஹிய்யா கொடுப்பதில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா?பிரதியமைச்சர் முனீர் முளப்பர் அளித்த பதில்.
"மே மாதம் முதலாம் திகதி தான் வெசாக் போயா தினம் காணப்பட்டது. எமது நாட்டின் உயர்பீட பௌத்த தேரர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப மே மாதம் 30 ஆம் திகதி இருக்கின்ற போயா தினத்திற்கு உடன்பாட்டுடன் பிற்போடப்பட்டது. இந்நிலையில் பொது நிர்வாக அமைச்சினால் மே மாதம் 27 ஆம் திகதியில் இருந்து ஜூன் இரண்டாம் திகதி வரை வெசாக் வாரம் என சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த சுற்று நிரூபம் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தவிர வேறு எந்த கருத்துக்களையும் அரசாங்கம் முன் வைக்கவில்லை. இந்த நிலையில் சிலர் இதனை அரசியல் ஆக்கி தங்களுடைய சில நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக முயல்கிறார்கள். அவர்கள் பதவிக்காக விளையாட்டையும் அரசியலாக்குகின்றார்கள். மார்க்கத்தையும் அரசியலாக்குகின்றார்கள். கடந்த முறை எமது ஹஜ்ஜுப் பெருநாள் தினமும் அதனை அண்டிய தினங்களுக்கு பொசான் வாரத்தில் தான் காணப்பட்டது. அப்போதும் எமது அரசாங்கமே காணப்பட்டது. நாம் கவனமாக எத்தகைய பிரச்சினைகளும் இல்லாமல் அதனை சிறப்பாக மேற்கொண்டோம். இந்த முறையும் நாங்கள் மிகவும் கவனமாக உழ்ஹிய்யா விடயத்தையும் மேற்கொள்ள இருக்கின்றோம். )
கேள்வி: அதில் ஏதாவது பிரச்சினை ஏற்படாது என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?)
பதில்: "எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்த வேண்டும் என்று தேவை அரசாங்கத்துக்கு இல்லை. அது முஸ்லிம் சமூகத்தின் கடமை. உரிமை என்பதையும் தாண்டி ஒரு இபாதத்தாக பார்க்கின்றோம். எமது கடமைகளை மேற்கொள்வதை போன்று, ஏனைய சமூகங்களின் மன உணர்வுகள் பற்றி தெளிவாக இருந்து செயற்பட வேண்டி ஒரு தருணமும் இருக்கிறது. அடுத்த வாரமாகும் போது குறித்த விடயம் சம்பந்தப்பட்ட சுற்று நிரூபம் வெளியாக இருக்கின்றது. எல்லோரும் அவசரப்படுகின்றார்கள். கேள்வி கேட்கின்றார்கள். எமது நாட்டில் போயா தினத்தில் மாத்திரமே மதுபான சாலைகளும் இறைச்சிக் கடைகளும் மூடப்படுகின்ற வழமை இருக்கின்றது. எனவே இது சம்பந்தமான சுற்று நிரூபம் இதுவரை வெளியிடப்படுவதில்லை. அத்தகைய சுற்று நிரூபம் வெளிவந்துள்ளதாக எதிர்த்தரப்பினர் வதந்திகளை பரப்பி மக்களை குழப்புகின்றனர். மீண்டும் அவர்களுடைய காலத்தில் இருந்த இனவாதத்தை கொண்டு வரலாமா என்ற முயற்சியிலே ஈடுபட்டு வருகின்றார்கள். அத்தகைய நிலைமை ஏற்படாமல் இருப்பதற்காக எமது அரசாங்கம் அனைத்து வேலைத் திட்டங்களையும் மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது"
