Our Feeds


Thursday, June 25, 2026

SHAHNI RAMEES

வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு!

 

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, 971 பேர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) படி, மொண்டல்பான் (Montalban) பகுதியில் இருந்து 13.2 கிலோமீட்டர் ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 7.1 ரிக்டர் அளவாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கராகஸ் (Caracas) நகரில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், அங்கிருந்த மக்கள் அந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவிக்கிறது. 

இதற்கிடையில், வெனிசுலாவில் ரிக்டர் அளவுகோலில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக தலைநகரின் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்து பலத்த சேதமடைந்துள்ளன. 

இந்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வெனிசுலா மற்றும் அதனையொட்டிய கரீபியன் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »