இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினரால் இன்று (30) கைது செய்யப்பட்ட புதிய ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவருமான ஷாமிலா பெரேரா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சந்தேக நபரை தலா ரூ. 1 மில்லியன் மதிப்புள்ள இரு பிணைகளில் விடுவிக்கவும், வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
