Our Feeds


Tuesday, June 9, 2026

Zameera

யாழ் வைத்தியசாலை தொண்டர்களின் போராட்டம் 4வது நாளாகவும் தொடர்கிறது


 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி ஆரம்பித்த போராட்டமானது நான்காவது நாளாகவும் நேற்று (08) இடம்பெற்றுள்ளது.

இன்றைய போராட்டத்தில் இரு அணிகளாக பிரிந்த சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவும், கொழும்பு சுகாதார அமைச்சுக்கு முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாண வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர்கள் வெற்றிடத்திற்கான நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு 92 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐந்து வருடங்களாக பணியாற்றம் தமக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே ஏனையோருக்கு வழங்கப்பட வேண்டும் என கூறியே இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

(பு.கஜிந்தன்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »