Our Feeds


Tuesday, June 23, 2026

SHAHNI RAMEES

இஸ்லாத்தை அவமதித்த ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனை உறுதி! - கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி

 


இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு,

இன இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதி செய்துள்ளது. 

குறித்த சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவித்து விடுதலை செய்ய ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து, நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். 

கடந்த 2016ஆம் ஆண்டு கிருலப்பனைப் பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இன  நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டார் எனக் குற்றம் சுமத்தி, பொலிஸாரினால் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »