Our Feeds


Wednesday, June 24, 2026

SHAHNI RAMEES

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு - வெல்லம்பிட்டியில் நேர்ந்த பயங்கர விபத்து!



அம்பாறை டிப்போவுக்குச் சொந்தமான இலங்கை

போக்குவரத்துச் சபை (SLTB) பஸ் ஒன்று இன்று (24) அதிகாலை 5.30 மணியளவில் வெல்லம்பிட்டியவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

​சாரதிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

​கொழும்பு கோட்டையிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த இந்த பஸ், பாதையை விட்டு விலகி வெல்லம்பிட்டிய, அம்பகஹ சந்தி பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

​இந்த விபத்தினால் பஸ்ஸுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாரதி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »