Our Feeds


Wednesday, June 3, 2026

SHAHNI RAMEES

ஹொரணையில் முதியோர் இல்லம் ஒன்றில் பயங்கர தீ விபத்து! - பலர் தீக்குள் சிக்கியுள்ளதாக அச்சம்!

 

ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில் 44 பேர் இதுவரையில் பாதுகாப்பாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர்.


இன்று (03) பிற்பகல் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


இந்தத் தீ விபத்தில் காயமடைந்த முதியோர் இல்லத்தைச் சேர்ந்த 7 பேர் சிகிச்சைக்காகக் கல்பாத மற்றும் ஹொரண வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எனினும், இந்தத் தீ விபத்தில் மேலும் 11 பேர் தீக்குள் சிக்கியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.


தீயைக் கட்டுப்படுத்துவதற்காகவும், சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காகவும் தற்போது 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »