Our Feeds


Thursday, June 4, 2026

Admin

சுரேஷ் சலேவின் மனு தொடர்பான தீர்மானம்!


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை விசேட வைத்திய சபை முன்னிலையில் ஆஜர்படுத்தி அறிக்கை ஒன்றைக் கோருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு சட்டமா அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கை மீதான உத்தரவை எதிர்வரும் 10ஆம் திகதி அறிவிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சுரேஷ் சலே சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்று இன்று (04) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டது.

அங்கு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »