Our Feeds


Saturday, June 6, 2026

Zameera

சர்வதேச மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த நீல்ஷானி தேர்வு


 விசேட தேவையுடையோர்கள் உரிமைகளுக்கான உடன்படிக்கையின் (CRPD) உறுப்பு நாடுகளின் மாநாட்டின் 19ஆவது அமர்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த விசேட தேவையுடையோர்கள் உரிமை ஆர்வலரான நீல்ஷானி டி சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

CRPDயின் 20ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன் இணைந்து நடைபெறும் இந்த மாநாட்டில், இலங்கையின் இளைஞர் பிரதிநிதியாக பங்கேற்கும் அவர், ஜூன் 9ஆம் திகதி நடைபெறும் தொடக்க அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட சர்வதேச தலைவர்களுடன் உரையாற்றவும் அழைக்கப்பட்டுள்ளார்.

டவுன் சிண்ட்ரோம் குறைபாட்டுடன் பிறந்த நீல்ஷானி டி சில்வா, விசேட தேவையுடையோர்கள் உரிமைகளுக்காக செயற்பட்டு வரும் ஆர்வலர், ஊக்கமூட்டும் பேச்சாளர், ஆசிரியர் மற்றும் ஆடை வடிவமைப்பாளராக அறியப்படுகின்றார். 

அவரது தேர்வு, விசேட தேவையுடையோர்கள் சமூகத்திற்கான பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய சாதனையாகப் பாராட்டப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »