Our Feeds


Saturday, June 6, 2026

Zameera

இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது


 இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 


இதற்கமைய, ஜூன் மாதம் 05ஆம் திகதியிட்ட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள இச்சட்டமூலத்தின்படி, முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டவாக்கத்தின் ஊடாக குறித்த நிறுவனம் ஒரு கூட்டுத்தாபன சபையாக நிறுவப்படவுள்ளது. 


நாட்டின் ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ள வல்லுநர்களுக்கான உயர்தரமிக்க தரநிலைகளை அறிமுகப்படுத்துவதையும் அதனைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »