Our Feeds


Saturday, June 6, 2026

Zameera

கொட்டா வீதி ரயில் கடவை தற்காலிகமாக மூடல்


 களனிவெலி மார்க்கத்தின் பேஸ்லைன் மற்றும் நாரஹேன்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள கொட்டா வீதி ரயில் கடவையில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாக, ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதுடன் கோட்டா வீதி ரயில் கடவையும் மூடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 


இந்த வீதி மூடலானது இன்று (06) காலை 9:30 மணி முதல் நாளை (07) காலை 7:30 மணி வரை அமுலில் இருக்கும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 


இக்காலப்பகுதியில் கொட்டா வீதி ரயில் கடவை வாகன போக்குவரத்திற்காக முழுமையாக மூடப்படவுள்ளதுடன், கொழும்பு கோட்டை மற்றும் நாரஹேன்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் இயக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதேவேளை, இன்று பிற்பகல் மூன்று சாதாரண ரயில் சேகைள் நாரஹேன்பிட்ட ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து அவிசாவளை ரயில் நிலையம் வரை பயணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


மேலும், இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களிலும் பிரதான மாரக்கத்தின் ஹொரப்பே ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாக, அந்த ரயில் கடவையையும் மூடுவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »