Our Feeds


Thursday, June 4, 2026

Zameera

யோஷித ராஜபக்ஷக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு


 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ தொடர்பான வழக்கை ஜூலை 09ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (04) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மறுஆய்வு மனு காரணமாக சாட்சிய விசாரணைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு அரச தரப்பு கோரியதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கும் வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த விசாரணை ஜூலை 09ஆம் திகதி நடைபெறும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »