Our Feeds


Monday, June 8, 2026

Admin

பிள்ளைகள் அனைவருக்கும் சமமான கல்வி - பிரதமர்!


பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிப் பொறுப்புக்கூறலுடன் அனைத்துப் பிள்ளைகளும் கல்வியின் தரத்தை சமமாக அனுபவிக்கக்கூடிய ஜனநாயகக் கல்வி முறையொன்றை ஏற்படுத்த அரசாங்கம் முன்நிற்கும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையின் மனிதவள முகாமைத்துவ மொடியுலின் முதலாம் கட்டம் மற்றும் 'ஈ-தக்சலாவ' கற்றல் முகாமைத்துவ முறைமையின் முன்னோடித் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிப் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கம் என்ற வகையில், அனைத்துப் பிள்ளைகளும் கல்வியின் தரத்தை சமமாக அனுபவிக்கக்கூடிய ஜனநாயகக் கல்வி முறையொன்றை ஏற்படுத்த வேண்டும். 

அதற்காகச் சரியான தரவுகள், கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பக் காரணிகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும். 

எமது அரசாங்கத்தைப் பொறுத்தவரை டிஜிட்டல் மயமாக்கல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். மாறிவரும் உலகிற்கு ஏற்ப நாமும் மாறி முன்னோக்கிச் செல்ல வேண்டும். 

அத்துடன், அரச சேவைகளை மிகவும் வினைத்திறனாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மக்களுக்கு வழங்க டிஜிட்டல் மயமாக்கல் அவசியம் என நாம் நம்புகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »