பலாங்கொடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஹவலதென்ன,
கஜுவத்த பகுதியில் உள்ள கற்குழியொன்றிலிருந்து 17 வயது மாணவி ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டதாக நேற்று (24) கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மஹவலதென்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில், அவரது தந்தை பலாங்கொடை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே, அவரது உடலம், கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மரணம் சம்பவித்தமைக்கான காரணம் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
அத்துடன், உடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று (25) பலாங்கொடை மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பலாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
