![]() |
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,342 ஆக உயர்ந்துள்ளதாக வெனிசுலா தகவல் அமைச்சு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய தரவுகளின்படி, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,470 ஆகவும், வீடுகளை இழந்தவர்களின் எண்ணிக்கை 17,345 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னதாக, வெனிசுலாவின் 215ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையில், நிலநடுக்கத்திற்குப் பிந்தைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் நியாயப்படுத்தினார்.
இந்த அனர்த்தத்திற்கு அரசாங்கம் தாமதமான மற்றும் போதியளவிலில்லாத பதிலை வழங்கியதாக பலர் மத்தியில் எழுந்துள்ள அதிருப்திக்கு மத்தியில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் தான் உடனடியாக பாதுகாப்புப் படைகளை களமிறக்கியதாகவும், அவசர காலங்கள் மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ள உதவும் வகையில் புதிய இராணுவப் பிரிவு ஒன்றை உருவாக்குவதாகவும் ரோட்ரிக்ஸ் அறிவித்தார்.
