அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தின் சமூக
நீதிக்கான போராட்டத்தின் மற்றுமொரு மைல் கல்…ஸகாத் எதிர்பார்க்கும் மாற்றம் நான்கு பைகள் நெல் வழங்குவதோடு முடிவடைவதல்ல. வறுமையை ஒழிப்பதும் அதன் பிரதான இலக்குகளில் ஒன்றாக இருந்தாலும், அதைவிட உயர்ந்த இலக்கு சமூக நீதியை நிலைநாட்டுவதாகும்.
அந்தத் தூரநோக்குப் பார்வையுடனேயே அக்கரைப்பற்று ஸகாத் நிதியம் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
நாளை ஞாயிற்றுக்கிழமை, ரூபா 1 கோடி 30 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய பல்வேறு சுயதொழில் வாய்ப்புகள் ஸகாத் தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன. அல்ஹம்துலில்லாஹ்.
சுயதொழில் வாய்ப்புகளை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல், பயனாளர்களின் தொழில் வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்கள், தொழில்முனைவோர் பயிற்சிகள் மற்றும் தர்பியா நிகழ்வுகளையும் அக்கரைப்பற்று ஸகாத் நிதியம் முன்னெடுத்து வருகின்றது.
மேலும், ஒரு வருட காலத்திற்கு அவர்களது தொழில் முன்னேற்றமும் ஆன்மீக வாழ்வும் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யப்பட்டு வழிகாட்டப்படவுள்ளமை இச்செயற்றிட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் சகோதரர்கள் தங்களது ஸகாத் மற்றும் ஸதகாக்களை தொடர்ச்சியாக வழங்கி வந்தால், அடுத்த பத்து ஆண்டுகளில் அக்கரைப்பற்றில் கணிசமான அளவில் வறுமையை குறைக்க முடியும். அதுமட்டுமன்றி, சமூக நீதியையும் மேலும் வலுப்படுத்த முடியும். இன்ஷா அல்லாஹ்.
பார்வையாளர்களாக அல்ல, மாற்றத்தின் பங்காளர்களாக நாம் அனைவரும் மாறுவோம்.
