பிரித்தானியாவின் புதிய பிரதமராகப்
பதவியேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாமிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
'பிரித்தானிய பிரதமராகப் பதவியேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாமிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையையும் அவர்களின் தேவைகளையும் அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் அரசியலே இறுதியில் வெற்றியடையும் என்பதற்கு உங்களின் தலைமைத்துவம் ஒரு சிறந்த சான்றாகும்.
எமது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு நட்புறவையும் பிணைப்பையும் எதிர்வரும் காலங்களில் மேலும் வலுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்' என எதிர்க்கட்சித் தலைவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
