மத்திய மலைநாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, பல நீர் தேக்கங்கள் வற்றிப்போகும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளது.
நீர் மின்சார உற்பத்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக பெருமளவில் நீரை வழங்கும் மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் தற்போது பாரிய அளவில் வற்றி வருகிறது.
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் தினமும் பெருமளவில் வற்றி வருவதோடு, பழைய தெல்தெனிய நகரத்தின் நஷ்டாவசேசங்கள் மீண்டும் வெளிப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் நாட்களில் நாட்டைப் பாதிக்கும் என கணிக்கப்பட்டுள்ள எல் நினோ நிலையும் இவ்வாறு நீர் ஆதாரங்கள் வற்றிப்போவதற்கு காரணமாக அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது.
