Our Feeds


Tuesday, July 28, 2026

ShortNews

சீனாவில் அடுத்தடுத்து பூமியதிர்ச்சி!


சீனாவின் வடமேற்கு மாகாணமான கிங்ஹாயில் அமைந்துள்ள ஷிங்ஹாய் மாவட்டத்தில் இன்று இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை 18 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த பூமியதிர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.

முதல் பூமியதிர்ச்சி  செவ்வாய்க்கிழமை காலை 11:16 மணியளவில் ரிச்டர் அளவில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளது.

முதல் பூமியதிர்ச்சி ஏற்பட்டுச் சரியாக 18 நிமிடங்களுக்குப் பின்னர், அதே பகுதியில் ரிச்டர் அளவில் 5.8 என்ற வலுவான இரண்டாவது பூமியதிர்ச்சி பதிவாகியுள்ளது.

இந்த இரண்டு பூமியதிர்ச்சிகளும் பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளன. இவை கிங்ஹாய் மாகாணத்தின் தலைநகரான சினின்கிலிருந்து சுமார் 244 கி.மீ தொலைவில் மையங்கொண்டிருந்தன.

பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »