தமிழ் - முஸ்லிம் பேரவையில், தமுகூ சார்பில் இராதாகிருஷ்ணன் எம்பி இடம் பெறுவார் - மனோ கணேசன்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) தலைமை குழுவின் (Presidium) தீர்மானத்தின்படி, தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையில் (PCTSP), கூட்டணியின் (TPA) பிரதிநிதியாக, தமுகூயின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வி. இராதாகிருஷ்ணன் எம்பி அவர்கள் பெயரிடப்பட்டுள்ளார்.
மேலும், கூட்டணியின் அரசியல் குழு (Politburo) உறுப்பினரான பரத் அருள்சாமியும், பேரவையில் கூட்டணியை பிரதிநிதித்துவதுடன் வி. இராதாகிருஷ்ணன் எம்பிக்கு துணையாக செயல்படுவார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
