Our Feeds


Tuesday, July 21, 2026

SHAHNI RAMEES

நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவின் கடைசி நாட்கள்!

 


தனது அரசியல் எதிர்காலம் குறித்து நாடாளுமன்றில்

இன்றையதினம் கருத்து வெளியிட்ட யாழ்.மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தற்போது நாடாளுமன்றத்தில் தனது கடைசி நாட்களைக் கழித்து வருவதாக தெரிவித்துள்ளார்.


ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.


"நான் நீண்ட காலம் நாடாளுமன்றத்தில் இருக்க போவதில்லை. இன்னும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன்.


தவறான எண்ணத்தை உருவாக்கும்

தன்னை நாடாளுமன்றத்திலிருந்து நீக்குமாறு ஓசல ஹேரத் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இது சிங்கள மக்கள் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களை விரும்பவில்லை என்ற தவறான எண்ணத்தை உருவாக்கும்," என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

மேலும் அண்மையில் கிளிநொச்சி அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நடந்த சம்பவம் குறித்தும் விளக்கம் வழங்கியிருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »