Our Feeds


Tuesday, July 21, 2026

Admin

சலேவின் மனு ஒத்திவைப்பு!


ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகத் தன்னை கைது செய்து தடுத்து வைப்பதைச் சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை மேலதிக பரிசீலனைக்காக வரும் ஜூலை 27 ஆம் திகதிக்கு அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம்மனு இன்று (21) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன தனது வாய்மொழி வாதங்களை நிறைவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, மேலதிக மனு பரிசீலனையை இந்த மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »