Our Feeds


Monday, July 13, 2026

SHAHNI RAMEES

கூட்டு தமிழ் பேசும் எதிர்க்கட்சி - ஒரு வெங்காயம்.


கூட்டு தமிழ் பேசும் எதிர்க்கட்சி - ஒரு வெங்காயம்.

உரிக்க உரிக்க கண்ணீர் வரும்; ஆனால் உள்ளே ஒன்றும் இருக்காது.

நாற்பது வருடங்களாக முஸ்லிம் அரசியல் தன்னை தமிழ் அரசியலில் இருந்து இயல்பாக பிரித்துக் கொண்டது.

தனி அடையாளம்,தனி வாக்கு வங்கி, தனி பேரம். 

கிழக்கில் நிலப் பிரச்சினையிலும்,வடக்கு-கிழக்கு இணைப்பு விவகாரத்திலும் இரு தரப்பும் எதிர் எதிர் திசையில் நின்றவர்கள்.

இன்று திடீரென்று 

“கூட்டு தமிழ் எதிர்க்கட்சி” உதயமாகிறதாம்.

எந்த முரண்பாடும் தீர்க்கப்படவில்லை.

எந்த பொது வேலைத்திட்டமும் இல்லை. கிழக்கின் எதிர்காலம் பற்றி ஒரு வரி கூட பேசப்படவில்லை.

பின் எது இவர்களை ஒன்று சேர்த்தது?

பயம். அரசியல் இருப்பு பற்றிய பயம்.

Kingmaker பதவி பறிபோன பயம். 

வாக்கு வங்கி கரைந்து போன பயம்.

மக்களின் பிரச்சினைகளுக்காக அல்ல; 

தங்கள் நாற்காலிகளுக்காக உருவான கூட்டு இது.

கொள்கை இல்லாத கூட்டணி வெங்காயம் மட்டுமல்ல - அது நீர்க்குமிழியும் கூட. முதல் தேர்தல் சீட் பங்கீட்டிலேயே உடையும்.

தமிழ் பேசும் மக்களுக்கு தேவை அழுகை வரவைக்கும் வெங்காயங்கள் அல்ல; 

பசி தீர்க்கும் அரசியல்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »