கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் அளித்துவிட்டு, சற்று முன் திணைக்களத்தை விட்டு வெளியேறினார்.
பாதாள உலகக் குழு தலைவர் 'கெஹெல்பத்தர பத்மே' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று (2) அழைக்கப்பட்டுள்ளார்.
