“டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி”
டெங்கு நோயற்ற, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “கிழக்கு மாகாண டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்” நிகழ்வு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சம்மாந்துறை இளைஞர் காங்கிரஸ் ஏற்பாட்டில் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் சம்மாந்துறையில் இன்று (26) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் சட்ட முதுமானி கௌரவ அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம்(பா.உ) கலந்து கொண்டதுடன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாஷித், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் கட்சியின் பிரதித் தலைவருமான பைசால் காசிம், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான முஷர்ரஃப் முத்துநபீன், கட்சியின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ காதர், கட்சியின் தேசிய பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான றஹ்மத் மன்சூர், கட்சியின் அம்பாரை மாவட்டச் செயலாளர் ஏ.சீ.சமால்டீன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் எம்.என். முஸ்மி, செயற்றிட்ட முகாமையாளர் எம்.ஐ.ஸாஹிர், சம்மாந்துறை பிரதேச இளைஞர் அமைப்பாளர் அர்ஷாத், அட்டாளைச்சேனை இளைஞர் அமைப்பாளர் றியா மசூர், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், இளைஞர் அணி பிரதிநிதிகள், மகளிர் அணி உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாக அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
