தெற்காசியாவில் சிவில் பதிவு மற்றும் முக்கிய புள்ளிவிபரங்களை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 'தெற்காசிய சிவில் பதிவு நிபுணர்களின் (CR8)' மாநாடு இன்று (13) திங்கட்கிழமை கொழும்பில் ஆரம்பமானது. இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைத்தீவு, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த முக்கிய நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
இலங்கையின் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மூன்று நாள் மாநாடு, ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு (UNESCAP), யுனிசெப் மற்றும் வைட்டல் ஸ்டிரேட்டஜிஸ் ஆகிய சர்வதேச அமைப்புகளின் பங்களிப்புடன் நடத்தப்படுகிறது.
இம்மாநாட்டின் போது, டிஜிட்டல் மயமாக்கல், தரவு ஆளுமை, தகவல் பரிமாற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் எவரையும் விடுபடச் செய்யாத உள்ளடக்கிய சிவில் பதிவு முறைகளை உருவாக்குதல் போன்ற முக்கிய முன்னுரிமைகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. மேலும், பங்குபெறும் நாடுகள் தங்களின் அனுபவங்கள் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு சிறந்த தளமாக இம்மாநாடு அமைந்துள்ளது.
