Our Feeds


Monday, August 3, 2026

Zameera

மஹர சிறைச்சாலையிலிருந்து 104 கைதிகள் பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றம்


 மஹர சிறைச்சாலையிலிருந்து 104 கைதிகள் தும்பறை, வெலிக்கடை, பூஸா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, மஹர சிறைச்சாலை கைதிகளைப் பார்வையிடுவதற்கான நேரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (04)க்குப் பின்னரே பார்வையாளர்கள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »