Our Feeds


Sunday, August 2, 2026

Zameera

பெருவில் விமான விபத்து - 13 பேர் பலி


 பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 


செஸ்னா கரவன் சி-208 ரகத்தைச் சேர்ந்த குறித்த விமானம், நேற்று (1) நாஸ்கா கோடுகள் தொல்பொருள் தளத்திற்கு மேல் பறந்துகொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானது. 


அதில் 11 சுற்றுலாப் பயணிகளும் 2 விமானிகளும் பயணித்துள்ளனர். 


விபத்தில் உயிரிழந்த பயணிகளில் ஜெர்மனியைச் சேர்ந்த இருவர், ஸ்பெயினைச் சேர்ந்த இருவர் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த ஏழு சுற்றுலாப் பயணிகள் அடங்குகின்றனர். 


விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. 


தெற்கு பெருவில் அமைந்துள்ள நாஸ்கா கோடுகள் என்பது பாலைவன மணலில் வரையப்பட்ட பழங்கால விலங்கு உருவங்களைக் கொண்ட, யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளமாகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. 


இந்த வரைபடங்களின் முழுமையான அமைப்பைக் காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் சிறிய ரக விமானங்களில் பயணம் செய்வது வழக்கம். 


விபத்தின் தீவிரத் தன்மை காரணமாக எவரும் உயிர் தப்பவில்லை எனவும் இதுவரை நான்கு சடலங்களை மீட்டுள்ளதாகவும் பெரு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »