Our Feeds


Sunday, August 23, 2026

SHAHNI RAMEES

யாழில் 14 வயது சிறுமியை கடத்தி துஷ்பிரயோகம் - 27 வயது இளைஞன் கைது!

 


யாழ்ப்பாணம், கோப்பாய்  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட

பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோப்பாய் பொலிஸ்  பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயதுச் சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.


முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே சிறுமியைக் கடத்திச் சென்று தனது பாதுகாப்பில் வைத்துள்ளார் என்பதைக் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, அந்த இளைஞரைக் கைது செய்த பொலிஸார் சிறுமியையும் மீட்டுள்ளனர்.


 கைது செய்யப்பட்ட இளைஞரைக் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸ் துறையினர், சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »