Our Feeds


Wednesday, August 26, 2026

Zameera

50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிப்பு


 பூனாகலை, கபரகலை தோட்டத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட "நவோதயாகம" வீடமைப்புத் திட்டத்தின் 50 வீடுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. 


இந்த 50 குடும்பங்களுக்கும் தலா 10 பேர்ச்சஸ் காணியும் 550 சதுர அடி பரப்பளவைக் கொண்ட வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 


ஒரு வீட்டிற்கு சுமார் 32 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இரண்டு படுக்கையறைகள், ஒரு வரவேற்பறை, ஒரு சமையலறை மற்றும் ஒரு குளியலறை ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த வீடுகள், அக்குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் கௌரவமான வாழ்க்கையை வாழ தேவையான பின்னணியை உருவாக்கியுள்ளன. 


புதிய வீடுகளில் குடியேறும் குடும்பங்களுக்குத் தேவையான தளபாடங்கள், வீட்டு உபகரணங்கள் மற்றும் சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சுமார் 175,000 ரூபாய் பெறுமதியில் நேற்று (25) வழங்கி வைக்கப்பட்டன. 


இந்த வேலைத்திட்டம் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »