Our Feeds


Saturday, August 8, 2026

SHAHNI RAMEES

ஷானி அபேசேகர, பிரதிக் காவல்துறை மா அதிபராக தரமுயர்வு!

 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பிரதி காவல்துறை மா அதிபராக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

இந்தத் தரமுயர்வு 2020 ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தரமுயர்வு நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு, ஷானி அபேசேகரவை பிரதி காவல்துறை மா அதிபர் பதவிக்கு உயர்த்த தேசிய காவல்துறை ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் அபேசேகர, தனது சேவைக் காலத்தில் பல முக்கிய குற்றவியல் விசாரணைகளைக் கண்காணிப்பதில் ஈடுபட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »