Our Feeds


Friday, August 7, 2026

ShortNews

குருவிட்ட சிறை மோதலில் இருவர் பலி!


இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று(7) காலை இடம்பெற்ற மோதலில் 2 பேர் பலியான நிலையில் 4 கைதிகள் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு குறித்த சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இன்று (7) காலை மீண்டும் அந்த சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரினால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் 4 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »