Our Feeds


Tuesday, August 4, 2026

ShortNews

சலேவின் இடைக்கால மனு விசாரணை ஒத்திவைப்பு!


அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்தும், வழக்கில் தலையிட்டு தனது தரப்பை முன்வைக்க அனுமதி கோரியும் தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுக்கள் தொடர்பான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (04) ஆரம்பமானது.

இதன்போது, இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் மற்றும் தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகளுக்காக ஆஜரான சட்டத்தரணிகள் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

இதையடுத்து, குறித்த இடைக்கால மனுக்கள் தொடர்பான மேலதிக விசாரணையை எதிர்வரும் 6ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கிற்கு சுரேஷ் சலேயின் மனைவியும் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »