முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேகச் செயலாளர், சுகீஸ்வர பண்டாரவை செப்டம்பர் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்ககுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் இன்று(25) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.