முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு
எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயாராகும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை⚠️எச்சரிக்கை கடிதமும் கையளிப்பு
📍📍📍📍📍📍📍📍📍📍📍📍📍
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள 09 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு ஏதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க குறித்த வைத்தியசாலை நிர்வாகம் தற்போது தயாராகியுள்ளது.
இது தொடர்பில் அறிவிக்கும் கடிதம், இன்று (14) வெள்ளிக்கிழமை குறித்த முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு தனித் தனியாகப் பெயரிடப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் எனக் குறிப்பிட்டு கையொழுத்திட்டுள்ள இந்தக் கடிதத்தில் பிரதிப் பணிப்பாளரின் இறப்பர் முத்திரையே பொறிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் நிர்வாகப் பணிப்பாளர் ஆகியோருக்கு இந்தக் கடிதத்தின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
'சுகாதார பணி உதவியாளர் சீருடை தொடர்பானது' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 👇
“கடந்த ஓகஸ்ட் 6ஆம் திகதி சுகாதார பணி உதவியாளராக எமது வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்தீர்கள்.
நீங்கள் கடமை பொறுப்பேற்ற அன்றைய தினத்திலேயே சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு ஆகியவற்றினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபங்களுக்கு அமைவாக சீருடை அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், சுற்றுநிரூபத்தினை பின்பற்றாமல் கடமைக்கு சமூகமளிப்பது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
நீங்கள் அனைவரும் தகுதிகாண் காலப் பகுதிக்குள் உட்பட்ட ஊழியர்கள் என்பது நினைவூட்டப்படுகின்றது.
உடன் செயற்படும் வண்ணம் சுகாதார பணி உதவியாளர்களுக்குரிய சீருடை தொடர்பான சுற்றறிக்கையின் வழிகாட்டல்களை பின்பற்றி கடமைக்கு சமூகளிக்குமாறு பணிக்கப்படுகின்றீர்கள்.
தவறும் பட்டசத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுவீர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

