Our Feeds


Monday, August 3, 2026

Zameera

கொழும்பு–கண்டி பிரதான வீதியில் கடுகன்னாவுக்கும் கனேதன்னவிற்கும் இடைப்பட்ட பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது


 கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கடுகன்னாவக்கும் கனேதன்னவிற்கும் இடைப்பட்ட பகுதி பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



நிலவும் பாதகமான வானிலை காரணமாக வீதிக்கு பாறைகள் மற்றும் மண் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



அதன்படி, மறு அறிவித்தல் வரை அவ்வீதியைப் பயன்படுத்தும் சாரதிகளை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


மேலும், வீதி போக்குவரத்திற்கு பாதுகாப்பானது என உறுதி செய்யப்படும் வரை குறித்த பகுதியினூடான பயணங்களைத் தவிர்க்குமாறும், பொலிஸார் வழங்கும் போக்குவரத்து அறிவுறுத்தல்களைச் சரியாகப் பின்பற்றுமாறும் சாரதிகளிடம் மேலும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »