காணாமல் போணவர்களில் 31 பேர் மீண்டும்
கண்டுபிடிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. அவர்கள் யார் யார் என்ற விபரங்களை எங்களிடம் தெரிவியுங்கள் என காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடும் தாயார் ஒருவர் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.எனினும் அவ்விடத்தில் நின்றுகொண்டிருந்த காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களோ, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ எவரும் அந்த தாயின் கோரிக்கையை நீதி அமைச்சருக்கு மொழிபெயர்த்து கூறாது நின்றனர். இதனால் அமைச்சர் கதறி அழுத தாயாரை ஆசுவாசப்படுத்திவிட்டு அவ் இடத்திலிருந்து சென்றுவிட்டார்.