Our Feeds


Thursday, August 20, 2026

ShortNews

அதிபர்களின் பதவி உயர்வுக்கு புதிய நிபந்தனைகள்!

மாகாண பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வுக்கான நிபந்தனைகள் தொடர்பான விரிவான தகவல்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் கீழ் தேசிய பாடசாலைகளில் 133 பேரும், மாகாண பாடசாலைகளில் 27 பேரும் என மொத்தம் 160 பணியிடங்கள் உள்ளன.

அதிபர் பதவிகளுக்காக தேசிய பாடசாலைகளில் 139 பணியிடங்களும், மாகாண பாடசாலைகளில் 7,125 பணியிடங்களும் என மொத்தம் 7,264 பணியிடங்கள் காணப்படுகின்றன. மேலும், மாகாண பாடசாலைகளில் இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்த 2,494 பேர் பதில் அதிபர்களாகப் பணியாற்றுகின்றனர்.

பாடசாலை வகைக்கு ஏற்ப அதிபர்களுக்கு ரூ.4,000 முதல் ரூ.8,000 வரையிலான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. கஷ்ட மற்றும் அதிககஷ்ட பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர்களுக்கு மேலதிக கஷ்டக் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன.

தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு எரிபொருள் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட கொடுப்பனவுகளாக அதிகபட்சம் ரூ.25,000 வரை வழங்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 3ஆம் தரத்திலிருந்து 2ஆம் தரத்திற்கும், 2ஆம் தரத்திலிருந்து 1ஆம் தரத்திற்கும் பதவி உயர்வு பெற தலா 6 ஆண்டுகள் சேவைக்காலம் அவசியமாகும்.

மேலும், வேதன ஏற்றங்கள், மொழி மற்றும் இணைப்புத் திறன் தேர்ச்சிகள் மற்றும் திறன் விருத்திப் பயிற்சிகளை நிறைவு செய்திருப்பது பதவி உயர்வுக்கான நிபந்தனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

1ஆம் தரப் பதவி உயர்வுக்கு முதுகலை கல்வி டிப்ளோமா அல்லது பட்டப்படிப்பு தகுதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »